Latest Movie :

'மாற்றான்'


தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலுமே 'மாற்றான்' ரிசல்ட் சொல்லும்படியாக இல்லை.Actor Suryaஇப்படத்தை ஆந்திரா விநியோகஸ்தர்களுக்கு விற்ற பிரபல தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும், சூர்யா பிரதர்சின் உறவினருமான ஞானவேல் ராஜாவை 'கேரோ' செய்கிற அளவுக்கு போய்விட்டதாம் நிலைமை.
முதல் ஷோ முடிந்த கையோடு கொடுத்த பணத்தை ரீஃபண்ட் கேட்டு இவர்கள் நடத்திய தர்ணாவுக்கு கொஞ்சம் பலனும் கிடைத்ததாம். வேறு வழியில்லாமல் விற்ற விலைக்கு பாதியாக அக்ரிமென்ட்டை மாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிவிட்டார் அவர்.
ரெண்டு சூர்யா. டபுள் லாபம் பார்க்கலாம் என்று நினைத்திருப்பார்கள். சிங்கிள் லாபம் வந்தா கூட ஓ.கே ங்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம் இப்போது. அதுபோகட்டும்... நாம் சொல்லப்போவது இன்னொரு அதிர்ச்சியான விஷயம்.
கொழுக்கட்டை மாவில் கோலப்பொடி செய்த மாதிரி, பொருந்தாத ஒரு கேள்வியை கேட்டு சூர்யாவை சங்கடப்படுத்தினார்களாம் ஒரு சேனலில். மாற்றான் பிரமோஷனுக்கு போயிருந்தவரிடம், 'இப்படத்தின் செகன்ட் பார்ட் வருமா?' என்று கேட்க, பார்ட் பார்ட்டாக சிரித்து வைத்தாராம் சூர்யாவும்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. LOGKEE - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger